உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆரம்ப துணை சுகாதார நிலைய கட்டட பணிகள் விறுவிறு

ஆரம்ப துணை சுகாதார நிலைய கட்டட பணிகள் விறுவிறு

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் அகூர் ஊராட்சியில் துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என அகூர் கிராமம் மற்றும் காலனி மக்கள், கடந்த, 10 ஆண்டுகளாக என அரசுக்கு கோரிக்கை வைத்தும் தொடர்ந்து ஊராட்சி கிராம சபை கூட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வந்தது.இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் அகூர் துணை சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு, மாவட்ட நிர்வாகம், 38.40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. மேலும் அதே மாதம், 29ம் தேதி துணை சுகாதார நிலையத்திற்கு கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நடப்பட்டது. தற்போது புதிய துணை சுகாதார நிலையம் கட்டடம் பணி துரித வேகத்தில் நடந்து வருகிறது. தற்போது, 50 சதவீதம் பணி நிறைவடைந்து உள்ள நிலையில், அடுத்த மாதத்திற்குள் பணி முழுதும் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு விடப்படும் என ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.l திருத்தணி ஒன்றியத்தில் 27 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் உள்ள பழங்குடியினர் இருளர்கள் தளம்போட்ட வீடுகள் இல்லாமல் நீர்நிலைகள் மற்றும் மலைப்பகுதியில் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். மின்சாரம், குடிநீர், சாலை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வந்தனர். இதையடுத்து, மத்திய, மாநில அரசின் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக கார்த்திகேயபுரம், கன்னிகாபுரம், சூர்யநகரம், சின்னகடம்பூர், தாடூர் மற்றும் வி.கே.என்.கண்டிகை ஆகிய ஊராட்சிகளில் வசிக்கும், 117 இருளர் குடும்பத்தினருக்கு தளம் போட்ட வீடுகள் கட்டுத்தருவதற்கு மாவட்ட நிர்வாகம் தீர்மானித்தது.தொடர்ந்து, 5 கோடியே, 29 லட்சத்து, 70 ஆயிரம் மதிப்பில், 117 வீடுகள் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டு, அந்த ஊராட்சி மன்ற தலைவர் மூலம் வீடுகள் கட்டும் பணிகள் கடந்த ஒன்றரை மாதமாக துவங்கின. தற்போது, வீடுகள் கட்டும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை