உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பிரதமர் கிசான் சம்மான்விவசாயிகளுக்கு அழைப்பு

பிரதமர் கிசான் சம்மான்விவசாயிகளுக்கு அழைப்பு

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், பிரதமர் 'கிசான் சம்மான்' நிதி திட்டத்தில் விடுபட்ட விவசாயிகள் இணையத்தில் பதிவு செய்யலாம்.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில், பிரதம மந்திரி 'கிசான் சம்மான்' நிதி திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பயனாளிகள் தொடர்ந்து பயன் பெறுவதற்கு நில விபரங்கள் ஆதார் எண், eKYC, வங்கி கணக்கு எண் மற்றும் தொலைபேசி எண் ஆகியவை பி.எம்.கிசான் இணையதளத்தில் உறுதி செய்யப்பட வேண்டும். பி.எம்.கிசான் திட்டத்தில் பதிவு செய்யாமல் விடுபட்ட விவசாயிகள் மற்றும் கிசான் கடன் அட்டை பெறாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் தங்கள் கிராம அளவிலான செயல் அலுவலர்களை அணுகி https://pmkisan.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யும் முறையை கேட்டறிந்து பதிவு செய்யவும். கிசான் கடன் அட்டை பெற விண்ணப்பித்தும், eKYC புதுப்பித்தும் பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி