மேலும் செய்திகள்
மழைநீருடன் கழிவுநீர் தேக்கம் கலெக்டர் உத்தரவு என்னாச்சு?
2 hour(s) ago
பல்லாங்குழியான சாலை வாகன ஓட்டிகள் அவதி
2 hour(s) ago
மதுபோதையில் அலப்பறை போக்குவரத்து பாதிப்பு
2 hour(s) ago
மீஞ்சூர், மீஞ்சூர் பேரூராட்சி, நாலுார் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடியிருப்பு வணிக வளாகம், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் என, 30,000க்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன.இவற்றிற்கு, மீஞ்சூர் அடுத்த மேலுார் கிராமத்தில் உள்ள துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் நடைபெறுகிறது. நாளுக்குநாள், மீஞ்சூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் குடியிருப்புகள் அதிகரித்தபடி உள்ளது.இதனால் மின்தேவையும் பன்மடங்கு கூடுதலாக தேவைப்படுகிறது. அதிக மின்பயன்பாடு காரணமாக சீரான மின்வினியோகம் இல்லை. அவ்வப்போது மின்வெட்டு ஏற்பட்டு, குடியிருப்புவாசிகள், வியாபாரிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.தற்போது பெரும்பாலான வீடுகளில் ' ஏசி' பயன்பாடு இருப்பதால், மின்தேவை அதிகரித்து, மின்மாற்றிகள் பழுதாகின்றன. இரவு நேரங்களில் மின்வெட்டு, ஏற்பட்டு குடியிருப்புவாசிகள் இரவு துாக்கத்தை தொலைத்து வருகின்றனர்.மீஞ்சூர் பகுதிக்கு என தனியாக துணை மின்நிலையம் அமைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. இதனால் குடியிருப்புவாசிகள் மின்வாரியத்தின் மீது அதிருப்தியில் உள்ளனர்.இது குறித்து மீஞ்சூர் சுற்றுவட்டார மக்கள் நலக்கூட்டமைப்பின் செயலர் ஷேக் அகமது கூறியதாவது:சென்னைக்கு அருகில் வேகமாக வளர்ந்து வரும் புறநகர் பகுதியாக மீஞ்சூர் இருக்கிறது. காட்டுப்பள்ளி, அத்திப்பட்டு பகுதியில் அமைந்துள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் மீஞ்சூரில் குடியிருப்புகளை கட்டி வசிக்கின்றனர். குடியிருப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகமாகும். அதற்கு ஏற்ப மின்வினியோகம் இல்லை. மேலுார் துணை மின்நிலையத்தில் இருந்து வினியோகிக்கப்படும் மின்சாரம் போதுமானதாக இல்லாமல், தொடர் மின்வெட்டு ஏற்படுகிறது.நாலுார் பகுதியில் துணை மின்நிலையம் அமைக்க திட்டமிட்டனர். அதற்கான எந்தபணிகளும் துவங்காமல் திட்டம் கிடப்பில் உள்ளது. தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து, மீஞ்சூர் பகுதிக்கு என தனியாக துணை மின்நிலையம் அமைத்து சீரான மின்வினியோகம் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago