| ADDED : ஜூன் 30, 2024 11:01 PM
கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியம் பாப்பரம்பாக்கம் ஊராட்சியிலிருந்து மண்ணுார், நெமிலி வழியாக ஸ்ரீபெரும்புதுார் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது.இந்த நெடுஞ்சாலையை பயன்படுத்தி பாப்பரம்பாக்கம், கொப்பூர், அரண்வாயல்குப்பம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பகுதிவாசிகள் தினமும் இரு சக்கர வாகனத்தில் சென்று வருகின்றனர்.இந்த நெடுஞ்சாலையில் பல இடங்களில் சாலை சேதமைடந்து கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஸ்ரீபெரும்புதுாரில் பாதாள சாக்கடை பணி நடந்து வருவதால் அரசு, தனியார், தொழிற்சாலை பேருந்துகள், கனரக வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் இந்த சாலை வழியாகத்தான் திருவள்ளூர் சென்று வருகின்றன.இந்த சாலை கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருவதோடு சில நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ள நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டுமென பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.