உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பாம்புகள் குடியிருப்பாக மாறி வீணாகி வரும் புங்கத்துார் பூங்கா

பாம்புகள் குடியிருப்பாக மாறி வீணாகி வரும் புங்கத்துார் பூங்கா

திருவள்ளூர்:பராமரிப்பு இல்லாததால், முட்செடிகள் வளர்ந்து புதராக மாறிய புங்கத்துார் பூங்கா, பாம்புகள் வசிக்கும் இடமாகவும், கால்நடைகளின் தொழுவமாகவும் மாறி வீணாகி வருகிறது.திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட புங்கத்துார் லட்சுமிபுரம் அருகில், 2015ம் ஆண்டு 13.75 லட்சம் ரூபாய் மதிப்பில் பூங்கா கட்டி திறக்கப்பட்டு, சில மாதங்கள் வரையே செயல்பட்டது. இங்குள்ள மின் இணைப்பு பெட்டி திறந்தவெளியில் அமைக்கப்பட்டிருந்ததால், அதே ஆண்டு, இந்த பூங்காவில் விளையாடிய சிறுவன், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தான்.அதன்பின், பூங்கா நிரந்தரமாக மூடப்பட்டது. அவ்வப்போது, நகராட்சி நிர்வாகம் பூங்காவில் வளர்ந்துள்ள முட்செடிகளை மட்டுமே அகற்றி வந்தது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பூங்கா பராமரிப்பு பணியை நகராட்சி நிர்வாகம் முற்றிலும் கைவிட்டது.அதற்கு பதிலாக பாரதியார் நகர், பத்மாவதி நகர், வரதராஜ நகர், ஜெயா நகர் உள்ளிட்ட பகுதிகளில், புதிய பூங்கா அமைக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் துவங்கி, பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது.ஆனால், புங்கத்துார் பூங்காவை சீரமைக்கும் பணியை நகராட்சி கைவிட்டதால், தற்போது, இந்த பூங்கா முழுதும் முட்செடிகள் வளர்ந்து புதராக மாறிவிட்டது. நடைபாதை சேதமடைந்தும், விளையாட்டு உபகரணங்கள் முட்செடிக்குள் மறைந்தும் வீணாகி வருகிறது.எனவே, நகராட்சி நிர்வாகம், புங்கத்துார் பூங்காவை பராமரித்து, மேம்படுத்தி சிறுவர்கள் விளையாடவும், முதியோர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கலெக்டருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை