உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சுந்தரராஜபுரத்தில் புதர் மண்டிய ஓடை சாலையில் தேங்கும் மழைநீர்

சுந்தரராஜபுரத்தில் புதர் மண்டிய ஓடை சாலையில் தேங்கும் மழைநீர்

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டையில் இருந்து சுந்தரராஜபுரம் வழியாக வீரமங்கலம் கிராமத்திற்கு தார் சாலை வசதி உள்ளது. ஆர்.கே.பேட்டை யில் இருந்து இந்த வழியாக சித்துார் சாலையை எளிதாக அணுக முடியும் என்பதால், வாகன ஓட்டிகள் இந்த மார்க்கமாக அதிகளவில் பயணிக்கின்றனர்.இந்நிலையில், சுந்தராஜபுரம் அருகே பாயும் ஓடை புதர் மண்டி கிடப்பதால், இந்த ஓடையில் பாய வேண்டிய மழை வெள்ளம், திசை மாறி சாலையில் பாய்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.மழை ஓய்ந்தாலும், இந்த பகுதி சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், இந்த வழியாக வயலுக்கு உரம் மற்றும் விவசாய தளவாடங்களை கொண்டு செல்பவர்கள் தவித்து வருகின்றனர். மழைநீர் நீண்ட காலத்திற்கு சாலையில் தேங்கி நிற்பதால், சாலையும் சேதம் ஆகிறது. ஓடையில் மண்டி கிடக்கும் கோரை புற்களை வெட்டி அகற்றி சீரமைக்கவும், தார் சாலையை செப்பனிடவும் பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை