| ADDED : ஜூலை 24, 2024 11:17 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த நான்கு குடும்ப வாரிசுதாரருக்கு, முதல்வர் பொது நிவாரண நிதி வழங்கப்பட்டது.திருவள்ளூர் மாவட்டம் ஓ.சி.பி., கிரி நகர் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஆவடி பருத்திப்பட்டு தேவன்; பட்டாபிராம் தண்டூர் கிராமம் மோசஸ் ஆகியோர் விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடந்த சாலை விபத்தில், பெரியபாளையம், கருணீகர் தெருவைச் சேர்ந்த ஜெகநாதன், சாந்தி ஆகியோர் உயிரிழந்தனர்.இந்த நான்கு குடும்ப வாரிசுதாரருக்கு, முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, தலா 2 லட்சம் ரூபாய் காசோலையை, கலெக்டர் பிரபுசங்கர் வழங்கினார். மேலும், திருவள்ளூர் பெரியகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரீதா என்பவர், கடந்தாண்டு தீபாவளி பட்டாசு வெடித்த போது, வலது பக்கம் கண் சேதம் அடைந்தது. அவரது சிகிச்சைக்காக, 1 லட்சம் ரூபாய் காசோலை வழங்கப்பட்டது.இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.