உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பள்ளி வளாகத்தில் பாழடைந்த கட்டடத்தை அகற்ற கோரிக்கை

பள்ளி வளாகத்தில் பாழடைந்த கட்டடத்தை அகற்ற கோரிக்கை

திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை ஊராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.இந்த கிராமத்தில் ஊராட்சி அலுவலகம் ஒருங்கிணைந்த அரசு பள்ளி வளாகத்தில் அமைந்துள்ளது. இந்த கட்டடம் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.இக்கட்டடத்தை முறையாக ஊராட்சி நிர்வாகம் பராமரிக்காததால், பழுதடைந்தது. இதையடுத்து கடந்தாண்டு 29 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பூஞ்சோலை நகரில் புதிய ஊராட்சி கட்டடம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.இந்நிலையில் ஒருங்கிணைந்த பள்ளி வளாகத்தில் உள்ள பழைய ஊராட்சி அலுவலக கட்டடம் இதுவரை இடித்து அகற்றப்படவில்லை.கூரை சேதடைந்து சுவர்கள் பலமிழந்து உள்ளதால் எப்போது வேண்டுமானாலும் விழும் என்ற நிலையில் உள்ளது. மேலும் பள்ளி திறப்புக்கு சில நாட்களே இருக்கும் நிலையில் மாணவர்கள் வரும் போது பழுதடைந்த கட்டடம் மேலே விழுந்து விபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே பள்ளி வளாகத்தில் உள்ள பழுதடைந்த ஊராட்சி அலுவலக கட்டடத்தை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ