உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பூதுார் கோவில் குளத்தை சீரமைக்க கோரிக்கை

பூதுார் கோவில் குளத்தை சீரமைக்க கோரிக்கை

சோழவரம்: சோழவரம் ஒன்றியம், பூதுார் கிராமத்தில், கோவாத்தம்மன் கோவில் எதிரில் உள்ள குளம் பராமரிப்பு இன்றி கிடக்கிறது. குளத்தின் கரைகள் முழுதும் முள்செடிகள் வளர்ந்து இருக்கின்றன.குளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் ஆகாயத்தாமரை சூழ்ந்து, அவை அழுகி தற்போது மஞ்சள் நிறமாக இருக்கிறது. குளத்தின் அருகில் சென்றால் துர்நாற்றம் வீசுகிறது.கால்நடைகளின் குடிநீர் ஆதாரமாக குளத்து நீர் பயன்பட்டு வந்த நிலையில், தற்போது அது பாழாகி வருகிறது. கரைகளின் சரிவுகளில் பதிக்கப்பட்ட பாறை கற்கள் சரிந்து கிடக்கின்றன. இதனால் கரைகள் பலவீனம் அடைந்து வருவதுடன், அதன் அருகில் உள்ள சாலையோரங்களில் மண் அரிப்பும் ஏற்படுகிறது.பராமரிப்பு இன்றி பாழாகி வரும் மேற்கண்ட குளத்தில் உள்ள கழிவுகளை அகற்றி, துார்வாரி சீரமைக்கவும், கரைகளை பலப்படுத்தவும் வேண்டும் என கிராமவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ