உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கும்மிடி சிப்காட்டில் பள்ளம் சீரமைக்க கோரிக்கை

கும்மிடி சிப்காட்டில் பள்ளம் சீரமைக்க கோரிக்கை

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி சிப்காட் முகப்பில் உள்ள சாலைப் பள்ளங் களை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், 220 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அந்த சிப்காட் வளாகத்தில், தினசரி ஆயிரக்கணக்கான கன ரக மற்றும் இலகு ரக வாகனங்கள் சென்று வருகின்றன.சிப்காட் பிரதான சாலையின் முகப்பில், மழைநீர் தேங்கிய இடங்களில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், அவ்வழியாக கடந்து செல்லும் வாகனங்கள் சிரமத்துடன் கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.கும்மிடிப்பூண்டி சிப்காட் நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து, நுழைவாயில் முகப்பில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி