உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நொச்சிலி நீர்வரத்து கால்வாய் சீரமைக்க கோரிக்கை

நொச்சிலி நீர்வரத்து கால்வாய் சீரமைக்க கோரிக்கை

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு ஒன்றியம், நொச்சிலி கிராமத்தின் வடக்கில் ஏரிக்கரையை ஒட்டி, கங்கையம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகே பழமையான குளம் உள்ளது. குளத்திற்கு நொச்சிலி காப்புக்காட்டில் இருந்து நீர்வரத்து உள்ளது. இதற்கான வரத்து கால்வாய், அத்திமாஞ்சேரிபேட்டை சாலையின் குறுக்கே அமைந்துள்ளது. இந்த சாலை சமீபத்தில் விரிவாக்கம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.நீர்வரத்து கால்வாய் பாலமும் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக போக்குவரத்து துவங்கியுள்ளது. ஆனால், பாலம் கட்டுமான பணியின் போது அமைக்கப்பட்ட மாற்றுப்பாதை இதுவரை சீரமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், குளத்தின் நீர்வரத்து கால்வாய் துார்ந்து கிடக்கிறது. குளத்தின் நீர்வரத்து தடைபட்டுள்ளதால், மழைக்காலம் துவங்கியும், குளம் வறண்டு கிடக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக கோடை காலத்திலும் நிரம்பி இருந்த குளம், தற்போது வரத்து கால்வாய் சீரமைக்கப்படாமல் கிடப்பதால், குளம் வறண்டுள்ளது. இதனால், பக்தர்கள் மற்றும் சுற்றுப்பகுதி விவசாயிகள்அதிருப்தி அடைந்துள்ளனர்.பாலம் கட்டும் பணிக்காக துார்க்கப்பட்ட கால்வாயை, பணிகள் முடிந்துள்ள நிலையில் விரைந்து சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை