உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நேமளூர் காட்டு பாதையில் சாலை அமைக்க கோரிக்கை

நேமளூர் காட்டு பாதையில் சாலை அமைக்க கோரிக்கை

கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டை -- சத்தியவேடு சாலையில், சிறுவாடா பஸ் நிறுத்தம் அமைத்துள்ளது. அங்கிருந்து, சிறுவாடா செல்லும் சாலையில், ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு, நேமளூர் காப்பு காடு உள்ளது. அந்த காட்டு வழிப்பாதையில், எட்டு ஆண்டுகளுக்கு முன் சாலை அமைக்கப்பட்டது.கடந்த ஐந்து ஆண்டு காலமாக அந்த சாலை, முற்றிலும் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியது. அதன் பின் சாலை அமைக்கப்படவில்லை. இதனால், அவ்வழியாக கடந்து செல்லும் சிறுவாடா கிராம மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அவசர தேவைக்கு அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர்.அந்த காட்டு வழிப்பாதையில் உடனடியாக சாலை அமைக்க வலியுறுத்தி, கும்மிடிப்பூண்டி பி.டி.ஓ., அலுவலகம் முதல் மாவட்ட கலெக்டர் வரை சிறுவாடா மக்கள் மனு கொடுத்தனர். ஆனால் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் அந்த பாதை இருப்பதால், அதை வனத்துறையினரிடம் பெற்ற பின் கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகம் சாலை அமைக்க வேண்டும் என சிறுவாடா கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி