உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தக்கோலம் பகுதியில் சுடுகாடு வசதி ஏற்படுத்த கோரிக்கை

தக்கோலம் பகுதியில் சுடுகாடு வசதி ஏற்படுத்த கோரிக்கை

திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட தக்கோலம் சாலை, சியோன் நகர், சாய்பாபா நகர், இஸ்ரேல் நகர் உள்ளிட்ட பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இப்பகுதிவாசிகள் இறந்தால் சின்னம்மாபேட்டை ஓடை சுடுகாட்டில் அடக்கம் செய்து வருகின்றனர்.இங்கு அடக்கம் செய்ய திருவாலங்காடு ரயில் நிலைய தண்டவாளத்தை கடந்து, 2 கி.மீ., தூரம் செல்ல வேண்டி உள்ளது. மேலும் சாலையில் அதிகப்படியான வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் இறந்தவரை அடக்கம் செய்ய செல்வோர் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கின்றனர். எனவே சின்னகளக்காட்டூர் சாலையில் சின்னம்மாபேட்டை வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் சுடுகாடு வசதி ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதிவாசிகள் 10 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.ஒவ்வொரு முறையும் கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை வைத்தும் வருகின்றனர். ஆனால் வருவாய் துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ