| ADDED : ஜூலை 01, 2024 05:53 AM
பூந்தமல்லி : பூந்தமல்லி பகுதியில், போலீசார் இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.பூந்தமல்லி காவல் நிலைய எல்லையில், மூன்று திரையரங்குகள், 15க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள், ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த காவல் நிலைய எல்லையில், இரவு நேரங்களில் வழிப்பறி சம்பவங்கள் அதிக அளவில் நடக்கின்றன. கஞ்சா மற்றும் மது போதையில் அட்டகாசம் செய்பவர்களின் எண்ணிகை, நாளுக்கு நாள் அதிகிரித்து வருகிறது. இதனால், பணி முடித்து வீட்டிற்குச் செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். மதுபோதை நபர்கள், பொதுமக்களை மிரட்டுவதும், வழிப்பறி செய்வதும் தொடர்கிறது.எனவே, பூந்தமல்லியில் இரவு நேர ரோந்து பணியை, போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.