| ADDED : ஜூன் 30, 2024 12:20 AM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையில், ரெட்டம்பேடு சாலை சந்திப்பில், தபால் நிலையத்திற்கு சொந்தமான இடம் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்தது. நீதிமன்ற உத்தரவின்படி கும்மிடிப்பூண்டி தாசில்தார் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பில் இருந்த தபால் நிலைய இடம், கடந்த மே மாதம், 21ம் தேதி கையகப்படுத்தப்பட்டது. அந்த இடத்தில் தபால் நிலையத்திற்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.தற்போது, ஜி.என்.டி., சாலையில், சரண்யா நகர் பகுதியில், வாடகை கட்டடம் ஒன்றில் முதல் தளத்தில் தபால் நிலையம் இயங்கி வருகிறது. அங்கு வரும் பொதுமக்கள், செங்குத்தாக உள்ள இரும்பு படிகள் மீது அச்சத்துடன் ஏறி இறங்க வேண்டிய நிலையில் உள்ளனர். முதியவர்களும், பெண்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். சிரமத்தை கருதி, கையகப்படுத்திய இடத்தில் தபால் நிலையம் நிறுவ தபால்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.