உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புதிய ரேஷன் கடை கட்ட தேவம்பட்டு பகுதியினர் எதிர்ப்பு

புதிய ரேஷன் கடை கட்ட தேவம்பட்டு பகுதியினர் எதிர்ப்பு

பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியம், அகரம் ஊராட்சிக்கு உட்பட்ட தேவம்பட்டு கிராமத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் வளாகத்தில் ரேஷன் கடை செயல்படுகிறது.இங்கு, பெரிய தேவம்பட்டு, தேவம்பட்டு மேடு, தேவம்பட்டு காலனி, அரங்கம் காலனி பகுதிகளைச் சேர்ந்த, 625 குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்களை பெறுகின்றனர்.இங்கு, ரேஷன் கடைக்கு தனி கட்டடம் இல்லை. இதையடுத்து, கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையின் பயனாக, சி.எஸ்.ஆர்., நிதி, 18 லட்சம் ரூபாயில் புதிய கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டது.தற்போது ரேஷன் கடை இயங்கும் பகுதியில் புதிய கட்டடம் அமைக்காமல், 1 கி.மீ., தொலைவில், குறைந்த குடும்ப அட்டைதாரர்கள் உள்ள பகுதியில் கட்டுமான பணிகள் துவங்கப்பட்டு உள்ளன. இதற்கு கிராமவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.இது தொடர்பாக கிராமவாசிகள் தெரிவித்ததாவது:தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் வளாகத்தின் அருகில், 56 சென்ட் அரசு நிலம் காலியாகவே உள்ளது. அங்கு புதிய கட்டடம் அமைக்காமல், வேறு பகுதியில் கட்டுமான பணிகளை துவக்கியுள்ளனர்.இதனால், 1 - 2 கி.மீ., துாரம் சென்று ரேஷன் பொருட்களை வாங்க வேண்டிய நிலை ஏற்படும். மீஞ்சூர் ஒன்றிய அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொள்ளாமல், கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கி உள்ளனர். இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தால், அலட்சியமாக பதில் அளிக்கின்றனர்.தற்போது, ரேஷன் கடை செயல்பட்டு வரும் பகுதியில் போதுமான இடவசதி உள்ள நிலையில், தேவையின்றி வேறு பகுதியில் கட்டடம் கட்டி மக்களை அலைக்கழிக்க நினைக்கின்றனர்.எனவே, இதே பகுதியில் ரேஷன் கடை கட்டடம் அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், போராட்டங்களில் ஈடுபடுவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை