உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இரவில் தொடரும் மின் வெட்டு கும்மிடி பகுதிவாசிகள் தவிப்பு

இரவில் தொடரும் மின் வெட்டு கும்மிடி பகுதிவாசிகள் தவிப்பு

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி நகரில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி நகரம், பெத்திக்குப்பம், தேர்வழி, ஆத்துப்பாக்கம், ரெட்டம்பேடு, வழுதலம்பேடு, ஏனாதிமேல்பாக்கம் உட்பட, 35க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.கடந்த மூன்று நாட்களாக இரவு 9:00 மணியளவில் மின் வெட்டு ஏற்படுகிறது. இரவு துவங்கி அதிகாலை வரை அவ்வப்போது மின் வினியோகம் செய்யப்படும் நிலையில், பெரும்பாலான நேரங்களில் மின்வெட்டு ஏற்படுகிறது.இரு நாட்களுக்கு முன் இரவு நேரத்தில் தொடர்ந்து, 5 மணி நேரம் மின் வெட்டு ஏற்பட்டது. கும்மிடிப்பூண்டி பகுதியில் இரவு நேரத்தில் ஏற்படும் மின் வெட்டு பிரச்னையால், பொதுமக்கள் அனைவரும் துாக்கத்தை தொலைத்து தவித்து வருகின்றனர்.மறுநாள் அவர்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். 'மின்வாரிய அலுவலகத்திலும் முறையான பதில் கூறுவதில்லை' என, அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து மின் பொறியாளர் கூறியதாவது:கோடைக்காலத்தில் அதிக மின்னழுத்தம் காரணமாக அடிக்கடி ஜம்பர் ‛கட்'டாகிறது. ஒவ்வொரு முறையும் ஜம்பரை தேடி கண்டுபிடித்து சீரமைக்க தாமதமாகிறது.சிப்காட் நான்காவது துணை மின் நிலையத்தில் இருந்து இரவு நேரத்தில் கூடுதல் மின் வினியோகம் பெற ஏற்பாடு செய்து வருகிறோம். விரைவில் இரவு நேர மின்வெட்டுக்கு தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி