உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புதர் மண்டிக்கிடக்கும் சுகாதார நிலையம் மருத்துவ வசதிகளுக்கு பகுதிவாசிகள் அவதி

புதர் மண்டிக்கிடக்கும் சுகாதார நிலையம் மருத்துவ வசதிகளுக்கு பகுதிவாசிகள் அவதி

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட புதுமாவிலங்கை ஊராட்சி. இப்பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் பகுதிவாசிகள் அடிப்படை மருத்துவ வசதிகளுக்கு துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.இந்த சுகாதார நிலையத்தை புதுமாவிலங்கை, அகரம், காவாங்கொளத்துார், சத்தரை உட்பட 10 கிராமங்களைச் சேர்ந்த பகுதிவாசிகள் பயன்படுத்தி வந்தனர்.முறையான பராமரிப்பு இல்லாததால் இந்த துணை சுகாதார நிலையம் தற்போது சேதமடைந்து புதர் மண்டிக் கிடக்கிறது.இதனால் பகுதிவாசிகள் அடிப்படை மருத்துவ வசதிகளுக்கு கடம்பத்துார், பேரம்பாக்கம், திருவள்ளூர் சென்று கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் துணை சுகாதார நிலையத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென புதுமாவிலங்கை பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை