| ADDED : ஜூன் 28, 2024 02:44 AM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில், ரயில்வே மேம்பாலமும், தேசிய நெடுஞ்சாலையும் சந்திக்கும் இடம் உள்ளது. சென்னை, ஆந்திரா, மாதர்பாக்கம், கும்மிடிப்பூண்டி ஆகிய நான்கு திசை சாலைகள் சந்திக்கும் இடம் என்பதால், எப்போதும் பரபரப்பான காணப்படும்.அந்த சந்திப்பின் மத்தியில், சாலையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து, எப்போதும் லாரிகள் நிறுத்தப்படுகின்றன. சாலை முழுதும் மறைத்தபடி லாரிகள் நிற்பதால், பின்னால் வரும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.மேலும் சாலையை கடக்கும் பாதசாரிகள், நிறுத்தப்பட்டுள்ள லாரிகளால் வாகனங்கள் வருவது தெரியாமல், விபத்தை சந்திக்க நேரிடுகிறது.மேலும், மேம்பாலத்தின் இறக்கத்தில் வேகமாக வரும் வாகனங்கள், வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ள இடத்தில் திக்குமுக்காடுகின்றன. இதனால், பெத்திக்குப்பம் சந்திப்பு விபத்து அபாய பகுதியாக மாறியுள்ளது.எனவே, இச்சந்திப்பில் லாரிகளை நிறுத்த தடை விதிக்க, கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.