உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையில் நெற்குவியல் வாகன ஓட்டிகள் அச்சம்

சாலையில் நெற்குவியல் வாகன ஓட்டிகள் அச்சம்

திருவாலங்காடு: திருவாலங்காடு சுற்றுவட்டாரத்தில் நவரைபருவத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விளைந்த நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது.அறுவடை நெல்லை, நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், அந்தந்த பகுதிகளில் அரசு சார்பில் திறக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.இந்நிலையில் அறுவடை முடிந்த நிலையில் விவசாயிகள் நெல்லை களத்தில் கொட்டி துாற்றி வைத்துள்ளனர். தற்போது நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்ய தாமதம் ஏற்படுவதால் பாகசாலை மணவூர் பழையனுார் உள்ளிட்ட பகுதிகளில் சாலை, உயர்மட்ட பாலத்தில் நெல் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. நெல்லை பாதுகாக்க விவசாயிகள் தார்ப்பாய் கொண்டு மூடியும் முள்வேலி அமைத்துள்ளனர்.இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதாக புலம்புகின்றனர். எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ