உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆந்திரா ஊழியரிடம் ரூ.10,000 ஆட்டை

ஆந்திரா ஊழியரிடம் ரூ.10,000 ஆட்டை

திருத்தணி:ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி அக்மார்க் நகரைச் சேர்ந்தவர் முரளி, 40. இவர், சித்தூர் பகுதியில் தபால் நிலையத்தில் போஸ்ட் மேனாக பணியாற்றி வருகிறார்.இவர், நேற்று முன்தினம் தன் இருசக்கர வாகனத்தில் நகரியில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த எஸ்.வி.ஜி.புரம் கிராமத்தில்உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார்.இரவு 9:00 மணிக்கு இருசக்கர வாகனத்தில், திருத்தணி--- - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில், கே.ஜி.கண்டிகை அருகே செல்லும் போது, பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், திடீரென முரளியின் வாகனத்தை மறித்தார்.வாகன நிறுத்திய முரளியை கத்தியை காட்டி மிரட்டி, 10,000 ரூபாய் மற்றும் மொபைல்போன் ஆகியவற்றை பறித்து விட்டு தப்பிச் சென்றார். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ