உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நவீன சலவையகம் அமைக்க ரூ.3 லட்சம் மானியம்

நவீன சலவையகம் அமைக்க ரூ.3 லட்சம் மானியம்

திருவள்ளூர்:பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நவீன சலவையகம் அமைக்க, 3 லட்சம் ரூபாய் அரசு மானியம் வழங்கப்படுகிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்தோரின் பொருளாதாரத்தை முன்னேற்றும் விதமாக நவீன சலவையகம் அமைக்க, தமிழக அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. நவீன சலவையகம் அமைப்பதற்கு தேவையான இயந்திரங்கள், மூலப்பொருள் மற்றும் பிறமுன் நிகழ்வுகளுக்கு தேவையான நிதியில், 3 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க 10 நபர்கள் கொண்ட ஒரு குழுவாக செயல்பட வேண்டும். இக்குழு உறுப்பினர்களின் ஆண்டு வருமானம் 1 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.இந்த திட்டம் வாயிலாக பயன்பெற விரும்புவோர், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ