உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கிராமசபை கூட்டத்தில் புகார் எதிரொலி குடிநீரை பரிசோதிக்க மாதிரி எடுப்பு

கிராமசபை கூட்டத்தில் புகார் எதிரொலி குடிநீரை பரிசோதிக்க மாதிரி எடுப்பு

ஊத்துக்கோட்டை:பேரிட்டிவாக்கம் ஊராட்சியில், பேரிட்டிவாக்கம் கிராமம், காலனி, வடதில்லை, உப்பரபாளையம், ஏரிக்கரை ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு 2,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, ஆரணி ஆற்றில் எட்டு இடங்களில் போடப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் சேகரித்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.இங்கு குடிநீர் உப்பு தன்மையுடனும், தண்ணீரின் மேல் ஏடு போன்று படிவம் படிவதால், குடிக்க மற்ற பயன்பாட்டிற்கு உகந்ததாக இல்லை. கேன் தண்ணீர் வாங்கி குடிக்கும் நிலை உள்ளது. இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எவ்வித பலனும் இல்லை.சுதந்திர தினத்தை ஒட்டி பேரிட்டிவாக்கம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் பங்கேற்றார். அப்போது ஊராட்சியில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து ஊராட்சி மன்ற தலைவர் தில்லைகுமார், கலெக்டரிடம் கூறினார். கலெக்டர் குடிநீர் பிரச்சனை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அப்பகுதி மக்களிடம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் இருவர் நேற்று பேரிட்டிவாக்கம் ஊராட்சிக்கு சென்று, அங்கு போடப்பட்டு உள்ள எட்டு ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் மாதிரிகளை சேகரித்தனர்.இந்த நீர் பரிசோதனை செய்து முடிவுகள் வரும் 21ம் தேதிக்குள் கலெக்டர் மற்றும் ஊராட்சி மன்றத்திற்கு தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ