உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மணல் திருடியவர் கைது

மணல் திருடியவர் கைது

ஊத்துக்கோட்டை:வெங்கல் அருகே, மொன்னவேடு கிராமத்தை ஒட்டி, கொசஸ்தலை ஆற்றில் மணல் கடத்துவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. வெங்கல் போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியே மணல் மூடையுடன் வந்த பைக்கை நிறுத்தினர். போலீசாரை கண்டதும் ஒருவர் தப்பி ஓடினார். போலீசார் அவரை துரத்தி சென்று பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் அவர் மொன்னவேடு கிராமம், புதிய காலனியைச் சேர்ந்த கனகராஜ், 42 என்பது தெரியவந்தது. டூ- வீலரை பறிமுதல் செய்த போலீசார், கனகராஜை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை