உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பொன்னேரி:மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில், நேற்று பொன்னேரி சப்-கலெக்டர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாநில பொதுச்செயலாளர் ஜானகிராமன் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில், தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதிபடி தமிழகம் முழுவதும் நீண்ட காலமாக பணிபுரியும் தூய்மை பணியாளர்களை தமிழக அரசு உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.தூய்மை பணியாளர்களை தனியார் மயமாக்க கூடாது என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, உழைப்போர் உரிமை இயக்கத்தின் நிர்வாகிகள், இது தொடர்பான கோரிக்கை மனுவை, பொன்னேரி சப்-கலெக்டர் வாகே சங்கேத் பல்வந்திடம் அளித்தனர். அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக சப்-கலெக்டர் உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை