உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / விமான படையில் இசை கலைஞர் தேர்வு

விமான படையில் இசை கலைஞர் தேர்வு

திருவள்ளூர்:விமானப்படையில் 'அக்னிவீர் வாயு - இசை கலைஞர்' தேர்வுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:இந்திய விமானப்படையில், அக்னிவீர் வாயு - இசை கலைஞர் தேர்விற்கு, பெங்களூரு 7வது 'ஏர்மேன்' தேர்வு மையத்தில், ஜூலை 3 - 12ம் தேதி வரை ஆள்சேர்ப்பு நடக்கவுள்ளது.விருப்பமுள்ள இசை கலைஞர்கள் https://agnipathvayu.cdac.inஎன்ற இணையதளத்தில், வரும் ஜூன் 5ம் தேதி வரை பதிவு செய்யலாம். திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த இருபாலரும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ