உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குடியிருப்பு பகுதி சாலையில் குளம்போல் தேங்கும் கழிவுநீர்

குடியிருப்பு பகுதி சாலையில் குளம்போல் தேங்கும் கழிவுநீர்

திருமழிசை: திருமழிசை பேரூராட்சியில் 15 வார்டுகளில் 130க்கும் மேற்பட்ட தெருக்களில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இங்கு, கடந்த 2007ம் ஆண்டு 40.60 கோடி ரூபாய் செலவில், சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தால் துவக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டப் பணிகள் 2019ம் ஆண்டு நிறைவடைந்தது.பணிகள் நிறைவடைந்து நான்கு ஆண்டுகள் ஆகியும் இன்று வரை பாதாள சாக்கடை பல பகுதியில் அடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகளில் கழிவுநீர் வழிந்தோடுவது தொடர்கதையாக நடந்து வருகிறது.இதனால் பகுதிவாசிகள் நடந்து செல்ல கூடிய முடியாத அளவு சிரமப்பட்டு வருவதோடு தொற்று நோய் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.எனவே, மாவட்ட கலெக்டர் திருமழிசை பேரூராட்சியில் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி