உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சார் - பதிவகம் மாற்றம் குறித்து மக்கள் கருத்து கேட்பு கூட்டம்

சார் - பதிவகம் மாற்றம் குறித்து மக்கள் கருத்து கேட்பு கூட்டம்

திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் வருவாய் மாவட்டம் மற்றும் திருவள்ளூர் பதிவு மாவட்டத்தில் உள்ள ஆரணி சார் - பதிவகத்தில் உள்ள இருளிப்பட்டு குக்கிராமத்தை, திருவள்ளூர் பதிவு மாவட்டம், பொன்னேரி சார் - பதிவகத்தில் உள்ள முதன்மை கிராமமான ஜகனாதபுரத்துடன் இணைக்கப்பட உள்ளது.இந்த இணைப்பு குறித்து ஜகனாதபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தில், கலெக்டர் தலைமையில் கருத்து கேட்கும் கூட்டம், வரும் 10ம் தேதி பகல் 11:00 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கிராமவாசிகள் பங்கேற்று தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை