உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சமூக சேவகர் விருது: விண்ணப்பம் வரவேற்பு

சமூக சேவகர் விருது: விண்ணப்பம் வரவேற்பு

திருவள்ளுர்: தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில், பெண்கள் முன்னேற்றத்திற்காக சிறந்த முறையில் சேவையாற்றி வரும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக சேவகருக்கு, 2024ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று தமிழக முதல்வரால் விருதுகள் வழங்கப்பட உள்ளது.இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:விருது பெற விரும்பும் சமூக சேவகர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்க வேண்டும்.மேலும், பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து, பெண்கள் முன்னேற்றத்திற்கு பணியாற்றி இருக்க வேண்டும்.சமூக சேவை புரிந்து வரும் தொண்டு நிறுவனம், அரசு அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக சேவை புரிந்திருக்க வேண்டும்.விருதை பெறுவதற்கு திருவள்ளூர் மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த முறையில் சேவையாற்றி வரும் தகுதியான தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக சேவை புரிந்து வரும் சமூக சேவகர்கள் https://awards.tn.gov.inஎன்ற இணையதளத்தில் ஜூன் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இணையதளத்தில் விண்ணப்பித்த நகலுடன், திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு, விருதுக்கான படிவத்தை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன் சமூக சேவகர் இருப்பிடத்தின் அருகில் உள்ள காவல் நிலையத்தில், குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்பதற்கான சான்று பெற வேண்டும்.மேலும், சேவை பற்றிய புகைப்படத்துடன் கூடிய ஆவணங்களை, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தனித்தனியாக மூன்று செட் புத்தகம் தயார் செய்து, ஜூன் 25ம் தேதி மாலை 5:00 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், 2வது தளம், கலெக்டர் அலுவலகம், திருவள்ளூர் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை