உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வட்ட வழங்கல் அலுவலகத்தில் 13ல் சிறப்பு குறைதீர் முகாம்

வட்ட வழங்கல் அலுவலகத்தில் 13ல் சிறப்பு குறைதீர் முகாம்

திருவள்ளூர்: அனைத்து வட்ட வழங்கல் அலுவலகத்தில், வரும் 13ல் ரேஷன் கார்டுதாரர் சிறப்பு குறைதீர் முகாம் நடக்கிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வட்டங்களிலும், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான குறைதீர் முகாம், 13ல் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. முகாமில், பொதுமக்கள்தங்கள் மின்னனு குடும்ப அட்டையில் திருத்தம்மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன் பெறலாம்.இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ