உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சோளிங்கர் அருகே புள்ளிமான் மீட்பு

சோளிங்கர் அருகே புள்ளிமான் மீட்பு

சோளிங்கர்:சோளிங்கர் ஒன்றியம், பிள்ளையார்குப்பம் கிராமத்தில் உள்ள பூந்தோட்டத்திற்கு நேற்று முன்தினம் புள்ளிமான் ஒன்று தண்ணீர் தேடி வந்தது. அங்கிருந்த நாய்கள், புள்ளிமானை விரட்டின. அங்கு விவசாய பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நாய்களை விரட்டி விட்டு, புள்ளிமானை மீட்டனர். உடன், பாணாவரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர், புள்ளிமானை மீட்டு, பாணாவரம் காப்புக்காட்டில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை