உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நால்வர் வாலிபால் போட்டி செயின்ட் பீட்ஸ் சாம்பியன்

நால்வர் வாலிபால் போட்டி செயின்ட் பீட்ஸ் சாம்பியன்

சென்னை:செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் உயர்நிலைப் பள்ளி சார்பில், முதல் முறையாக, '4ஏ - சைடு' எனும் நால்வர் விளையாடும் வாலிபால் போட்டி, மயிலாப்பூரில் உள்ள அப்பள்ளி மைதானத்தில் நடத்தியது.ஓபன் முறையில் நடந்த இப்போட்டியில், செயின்ட் பீட்ஸ், கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ., - அடையார் பாலவித்யாமந்திர், திருவான்மியூர் அரசு பள்ளி உட்பட 16 அணிகள் பங்கேற்றன.அணிகள், நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, 'லீக்' மற்றும் 'சூப்பர் லீக்' அடிப்படையில் மோதின. சூப்பர் லீக் போட்டியை தொடர்ந்து நடந்த முதல் அரையிறுதியில், பெரம்பூர் டான் பாஸ்கோ மற்றும் மான்போர்ட் அணிகள் மோதின. அதில், 17 - 21, 21 - 15, 15 - 11 என்ற புள்ளிக்கணக்கில், பெரம்பூர் டான் பாஸ்கோ அகாடமி அணி வெற்றி பெற்றது.மற்றொரு அரையிறுதியில், செயின்ட் பீட்ஸ் அணி, 21 - 14, 21 - 18 என்ற நேர் செட் கணக்கில் அம்பத்துார் பிரண்ட்ஸ் அணியை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், செயின்ட் பீட்ஸ் அணி, 21 - 17, 18 - 21, 21 - 15 என்ற கணக்கில் பெரம்பூர் டான் பாஸ்கோ அகாடமி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. சாம்பியன் கோப்யை வென்ற செயின்ட் பீட்ஸ் பள்ளிக்கு, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இருதயராஜ் பரிசுகள் வழங்கினார்.சாம்பியன் கோப்பையை வென்ற செயின்ட் பீட்ஸ் அணி மற்றும் போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் . இடம்: மயிலாப்பூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்