உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சேலையூரில் லாரி ஓட்டுனர் படுகொலை உடன் தங்கியிருந்த நபர் சிக்கினார்

சேலையூரில் லாரி ஓட்டுனர் படுகொலை உடன் தங்கியிருந்த நபர் சிக்கினார்

சேலையூர், தாம்பரம் அடுத்த சேலையூர், பதுவஞ்சேரியைச் சேர்ந்தவர் வினோத் என்கிற 'பாம்' வினோத், 37; ஆட்டோ ஓட்டுனர். செங்கல்பட்டு அடுத்த குருவன்மேடு பகுதியை சேர்ந்தவர் குமார், 50; லாரி ஓட்டுனர்.இருவரும், மூன்று மாதங்களாக அகரம் பிரதான சாலை பகுதியில், அறை எடுத்து தங்கியிருந்தனர்.நேற்று முன்தினம் இரவு, 'பாம்' வினோத், குமார் மற்றும் விக்கி என்பவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். பின், அறைக்கு சென்றுள்ளனர். அப்போது, போதையில் இருந்த அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த 'பாம்' வினோத், வீட்டின் வெளியே இருந்த கல்லை எடுத்து குமார் தலையில் போட்டுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே, குமார் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.அதீத போதையில் இருந்த பாம் வினோத் மற்றும் விக்கி, காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். பின், அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், லாரி ஓட்டுனரான குமாரின் உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.கொலையாளிகளை தேடி வந்த சேலையூர் தனிப்படை போலீசார், நேற்று அதிகாலை ஆவடி அருகே வினோத்தை கைது செய்தனர். தப்பி ஓடிய விக்கியை தேடி வருகின்றனர்.

யார் இந்த வினோத்?

கைது செய்யப்பட்ட வினோத், ஏற்கனவே முன்னாள் முதல்வர் பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, 'பாம்' வினோத் என பெயர் வந்தது. மது போதையில் ஏற்கனவே, கூலித்தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கும் இருப்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை