உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / காட்டூர் ஏரியில் மண் அள்ள கடும் எதிர்ப்பு நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம்

காட்டூர் ஏரியில் மண் அள்ள கடும் எதிர்ப்பு நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம்

பொன்னேரி:பொன்னேரி அடுத்த காட்டூர் கிராமத்தில், 362 ஏக்கர் பரப்பில் பாசன ஏரி உள்ளது. ஆரணி ஆற்றில் இருந்து கால்வாய் வழியாக ஏரிக்கு தண்ணீர் கொண்டு வந்து சேமிக்கப்படுகிறது.ஏரியில் தேங்கும் தண்ணீரை கொண்டு காட்டூர், அபிராமபுரம், கடப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில், 1,700 ஏக்கர் பரப்பு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக, இந்த ஏரியையும், இதன் அருகில் உள்ள தத்தமஞ்சி கிராமத்தில், 252 ஏக்கர் பரப்பிலான ஏரியையும் நீர்த்தேக்கமாக மாற்ற திட்டமிடப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு முன், 62 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் துவக்கப்பட்டன.இரு ஏரிகளிலும், 0.35 டி.எம்.சி., தண்ணீர் தேக்கி வைக்கும் அளவிற்கு கரைகள் பலப்படுத்தப்பட்டு, விவசாயத்திற்கு தண்ணீர் வெளியேற்றுவதற்காக, கிணறு மதகுகளும் அமைக்கப்பட்டன.கடந்தாண்டு மழையின்போது, இரண்டு ஏரிகளிலும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, பாசனத்திற்கு பயன்படுத்துப்பட்டது.இந்த நிலையில், ஏரியில் உள்ள தண்ணீரை வெளியேற்றிவிட்டு, மண் அள்ள திட்டமிடப்பட்டு வருகிறது. இதற்கு கிராமவாசிகள், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:தனிநபர்கள் சிலர் புதிய சாலை பணிகளுக்கு எனக் கூறி ஏரியில் இருந்த தண்ணீரை வெளியேற்றினர். கிராமவாசிகள் எதிர்ப்பை தொடர்ந்து, அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு மதகுகள் மூடப்பட்டன.தண்ணீர் வெளியேற்றியவர்களை கேட்டால், விவசாயத்திற்காக தண்ணீர் வெளியேற்றியதாக கூறினர். தற்போது, இந்த பகுதியில் யாரும் விவசாயம் செய்யாத நிலையில், மண் எடுப்பதற்காகவே ஏரியில் உள்ள தண்ணீரை வெளியேற்ற திட்டமிடுகின்றனர்.காட்டூர் ஏரியில் மண் அள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க கூடாது. நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ