மேலும் செய்திகள்
இருளில் மூழ்கும் சாலை இரவில் பக்தர்கள் அச்சம்
5 hour(s) ago
மரகதேஸ்வரருக்கு அன்னாபிஷேகம்
5 hour(s) ago
பழுதான அரசு வாகனங்கள் வரும் 10ம் தேதி ஏலம்
5 hour(s) ago
திருவள்ளூரில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
5 hour(s) ago
திருவள்ளூர்:திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், குடிநீர் இல்லாததால், நோயாளிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.திருவள்ளூர் அரசு மருத்துவமனை, ஜே.என்.சாலையில் செயல்பட்டு வருகிறது. கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன் இம்மருத்துவமனை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.இங்கு, மகப்பேறு, பச்சிளங்குழந்தை பராமரிப்பு, அவசர சிகிச்சை, மூட்டு மாற்று சிகிச்சை, இருதயவியல் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ வசதி உள்ளது. தினமும் 3 ஆயிரம் பேர் புறநோயாளியாக சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.இந்நிலையில் இம்மருத்துவமனையில், குடிநீர் வசதி இல்லை. மேலும், ஏற்கனவே செயல்பட்டு வந்த அம்மா உணவகமும் இடித்து அகற்றப்பட்டது. இதனால், நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வருவோர் குடிநீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். மேலும், மகப்பேறு பிரிவில் உள்ள குழந்தைகளை சுத்தம் செய்யவும், சுடுநீர் கிடைக்காமல், சாலையை கடந்து, கடைகளில் வாங்கும் அவலம் உள்ளது.எனவே, நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வருவோர் வசதிக்காக, உணவகம் மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என, மருத்துவமனை நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago