உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / டாஸ்மாக் விடுமுறை ஆந்திராவுக்கு படையெடுப்பு

டாஸ்மாக் விடுமுறை ஆந்திராவுக்கு படையெடுப்பு

கும்மிடிப்பூண்டி:தமிழகத்தில் நாளை லோக்சபா தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, நேற்று முதல் அரசு மதுக்கடைகள் அனைத்தும் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டன.திருவள்ளூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி, ஆந்திர எல்லையை ஒட்டியுள்ளது. கும்மிடிப்பூண்டி பகுதியில் மதுக்கடைகள் மூடப்பட்ட போதும், அருகில் உள்ள ஆந்திர எல்லையில், பனங்கள் மற்றும் ஆந்திர மாநில அரசு மதுக்கடைகள் இயங்கி வருகின்றன.இதனால், நேற்று கும்மிடிப்பூண்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 'குடி'மகன்கள் எளாவூர் அருகே உள்ள ஆந்திர பகுதியான பனங்காடு, பெரியவேடு, தடா, காரூர் உள்ளிட்ட பகுதிகளில் பனங்கள்ளும், ஆந்திர மாநில அரசு மதுக்கடைகளிலும் மது அருந்தி வருகின்றனர்.இதனால், தமிழக எல்லையை ஒட்டியுள்ள ஆந்திர 'கள்' மற்றும் மதுக்கடைகளில் நேற்று கனஜோராக விற்பனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை