உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தளபதி மெட்ரிக் பள்ளி சாதனை திருத்தணி அளவில் முதலிடம்

தளபதி மெட்ரிக் பள்ளி சாதனை திருத்தணி அளவில் முதலிடம்

திருத்தணி: திருத்தணியில் இயங்கி வரும் தளபதி கே.விநாயகம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வை, மொத்தம் 72 மாணவ - -மாணவியர் எழுதினர்.இதில், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த பள்ளி திருத்தணி அளவில் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்துள்ளது.இப்பள்ளியில் படித்த மாணவி பாவனா, 600க்கு, 575 மதிப்பெண் பெற்று பள்ளி அளவிலும், திருத்தணி அளவிலும் முதலிடம் பிடித்துள்ளார்.மேலும் பாவனா, பொருளியியல், வணிகவியல் மற்றும் கணக்கு பதிவியல் ஆகிய பாடங்களில், 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.மாணவி தனலட்சுமி, 600க்கு 558 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மாணவி மதுஸ்ரீ, 600க்கு 545 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர். இதுதவிர, 20 மாணவர்கள், 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.பள்ளி அளவில் முதலிடம் பிடித்த மூன்று மாணவியரையும், பள்ளி தாளாளர் எஸ்.பாலாஜி இனிப்பு மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார். இதில், பள்ளி முதல்வர் விநாயகம் மற்றும் பள்ளி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ