உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பின்னோக்கி நகர்ந்து கம்பத்தில் மோதிய பஸ்

பின்னோக்கி நகர்ந்து கம்பத்தில் மோதிய பஸ்

திருத்தணி:திருத்தணி நகராட்சி அலுவலகம் பின்புறத்தில் பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. இந்த பேருந்து நிலையத்திற்கு தினமும் 250க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வந்து செல்கின்றன.இந்நிலையில் நேற்று மதியம் திருவள்ளூரில் இருந்து பயணியரை ஏற்றி வந்த தடம் எண் 197 அரசு பேருந்து திருத்தணி பேருந்து நிலையத்திற்கு வந்தது. பயணியர் அனைவரும் இறங்கிய பின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இருவரும் மதிய உணவு அருந்த சென்றனர்.அப்போது திடீரென பேருந்து பின்னோக்கி சென்று இரும்புக் கம்பத்தில் மோதி நின்றது. இதில் பின்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. பேருந்துக்காக காத்திருந்த பயணியர் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பேருந்து ஓட்டுனர் பேருந்தை கட்டுப்படுத்தி நிறுத்தினார்.பேருந்தில் ஹேண்ட் பிரேக் சரியாக வேலை செய்யாததால் பின்னோக்கி வந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ