உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நிழற்கூரை இங்கே... பாதை எங்கே?

நிழற்கூரை இங்கே... பாதை எங்கே?

பள்ளிப்பட்டு,:பள்ளிப்பட்டு ஒன்றியம், சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் குமாரராஜபேட்டை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில், விநாயகர் கோவில் அருகே, பயணியர் நிழற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்கூரைக்கும், சாலைக்கும் இடையே குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம் நீண்டகாலமாக சமன்செய்யப்படாமல் உள்ளது.இதனால், இந்த பள்ளத்தில் வளர்ந்துள்ள செடிகளால், பள்ளம் மறைந்து, நிழற்கூரைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், எதிரில் வரும் வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் போது, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே, பயணியர் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி, நிழற்கூரை முன் உள்ள பள்ளத்தை சீரமைத்து, முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை