உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கிடப்பில் கால்வாய் அமைக்கும் பணி அச்சத்தை ஏற்படுத்தும் மெகா பள்ளம்..

கிடப்பில் கால்வாய் அமைக்கும் பணி அச்சத்தை ஏற்படுத்தும் மெகா பள்ளம்..

கும்மிடிப்பூண்டி: சென்னை - - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை ஓரம், கும்மிடிப்பூண்டி சிப்காட் வடக்கு பிரதான சாலை சந்திப்பில், நான்கு மாதங்களுக்கு முன் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கால்வாய் இணைப்பு பணிகள் மேற்கொள்ளாமல், கிடப்பில் போடப்பட்டது. அதற்காக எடுக்கப்பட்ட மெகா பள்ளம் தற்போது வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த அச்சுறுத்தலாக உள்ளது. அந்த பள்ளத்தை சுற்றி எச்சரிக்கை தடுப்புகளும் வைக்கப்படவில்லை.சிப்காட் தொழிற்சாலைகளுக்கு செல்பவர்கள், தாசில்தார் மற்றும் சார் பதிவாளர்கள் செல்பவர்கள், தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திரா நோக்கி செல்பவர்கள் என மூன்று திசைகளில் செல்லும் வாகனங்கள் சந்திக்கும் முக்கிய பகுதியாகும். சற்று கவனம் தவறினாலும், அந்த பள்ளத்தில் வாகனங்கள் கவிழ கூடிய ஆபத்தான சூழல் நிலவுகிறது.அலட்சியமாக விடப்பட்டுள்ள அந்த பள்ளத்தை சுற்றி தடுப்பு அமைக்க வேண்டும். எஞ்சிய பணிகளை துரிதமாக மேற்கொண்டு பாதுகாப்பான பயணத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ