| ADDED : மே 07, 2024 06:44 AM
அரக்கோணம்: திருவாலங்காடு ஊராட்சி, பராசக்தி நகரைச் சேர்ந்தவர் டில்லி, 26; கார் ஓட்டுனர். இவர், நேற்று முன்தினம் இரவு அரக்கோணம் அடுத்த மோசூர் வரை சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.அரிசந்திராபுரம் அருகே வந்த போது வழிமறித்த கஞ்சா போதையில் இருந்த மூவர், 'பணம் எவ்வளவு வைத்துள்ளாய் எடுத்து கொடு' என மிரட்டியதோடு, பணம் இல்லாத ஆத்திரத்தில், இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு தலையில் தாக்கியுள்ளனர்.இதில், லேசான காயமடைந்த டில்லி சாலையில் விழுந்தார். பின், இருசக்கர வாகனத்தை உடைத்த கஞ்சா ஆசாமிகள் கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இதுகுறித்து அரக்கோணம் காவல் நிலையத்தில் டில்லி புகார் அளித்தார். புகாரின்படி வழக்கு பதிந்த போலீசார், மூவரையும் தேடி விசாரிக்கின்றனர்.