உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு பஸ் பள்ளத்தில் சிக்கி சரிந்தது

அரசு பஸ் பள்ளத்தில் சிக்கி சரிந்தது

பொன்னேரி:பொன்னேரி பேருந்து நிலையத்தில் இருந்து காட்டூர் வழியாக மீஞ்சூர் பகுதிக்கு தடம் எண், டி-40 இயக்கப்படுகிறது. இது பெண்களுக்கான கட்டணமில்லாத பேருந்தாகும்.நேற்று மாலை, 4:30மணிக்கு வழக்கம்போல், நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேருந்து, பொன்னேரி ரயில்வே கேட்டை கடந்து, ஆலாடு நோக்கி செல்லும்போது பிரேக் செயலிழந்து, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.பின், எதிரில் வந்த லோடு ஆட்டோவில் உரசியபடி சென்று சாலையோர பள்ளத்தில் பேருந்து சாய்தபடி நின்றது.இதனால், பேருந்தில் பயணித்த, 40க்கும் அதிகமான பயணியர் பதற்றம் அடைந்தனர். அலறியடித்துக்கொண்டு அவசர அவசரமாக கீழே குதித்து உயிர் தப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.சிறிது துாரம் சென்றிருந்தால், மின்கம்பத்தில் மோதி பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் நேரிட்டிருக்கும். தகவல் அறிந்த பொன்னேரி பணிமனை ஊழியர்கள் அங்கு சென்று கிரேன் உதவியுடன், சாலையோரத்தில் கவிழ்ந்த பேருந்தை நேர் நிறுத்தினர்.பொன்னேரி பணிமனையில் உள்ள பேருந்துகள் ஓட்டை உடைசல்களுடன் இருப்பதால்,அவ்வப்போது இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுவதாக பயணியர் அதிருப்தியுடன் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி