உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மீனவர்கள் மோதல் விவகாரம் பழவேற்காடில் 2வது நாளாக பேச்சு

மீனவர்கள் மோதல் விவகாரம் பழவேற்காடில் 2வது நாளாக பேச்சு

பழவேற்காடு:பழவேற்காடில், 15 மீனவ கிராமத்தினர் கடலில் மீன்பிடி தொழில் செய்கின்றனர். இவர்கள் மீன்பிடி தொழில் செய்யும் பகுதிகளில் வெளிமாவட்டத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் தொழில் புரிவதால், கடந்த ஒரு மாதமாக பிரச்னை இருந்து வருகிறது.கடந்த 5ம் தேதி மீன்பிடிக்க சென்ற பழவேற்காடு, கூனங்குப்பம் மீனவர்கள் மீது, விசைப்படகு மீனவர்கள் தாக்குதல் நடத்தியதில், இருவர் காயமடைந்தனர்.இதனால், பழவேற்காடில் பதற்றம் ஏற்பட்டது. மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் சமாதானத்தை அடுத்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதை தொடர்ந்து, நேற்று முன்தினம் மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்வதை தவிர்த்தனர்.இதனிடையே, தாக்குதலில் ஈடுபட்ட புதுச்சேரி மாநிலம், கீழக்கரையைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள், 10 பேர் மீது வழக்கு பதிந்து, திருப்பாலைவனம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இரண்டாவது நாளாக நேற்றும் மீனவர்கள் தொழிலுக்கு செல்வதை தவிர்த்தனர். அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, மீனவ கிராம நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.காவல், மீன்வளம், கடலோர காவல்படையைச் சேர்ந்த அதிகாரிகளும் விசாரணையை தீவிரப்படுத்தியும், மீனவர்களிடையே தொடர் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்கள் தொழில் தவிர்ப்பால், மீன்பிடி படகுகள், வலைகள் கரைகளில் ஓய்வெடுத்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை