உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மூதாட்டியை கொன்று நகை கொள்ளை

மூதாட்டியை கொன்று நகை கொள்ளை

சென்னை: மயிலாப்பூர் சோலையப்பன் தெருவைச் சேர்ந்தவர் செண்பகம், 75, கடந்த 22ம் தேதி வீட்டில் சுய நினைவின்றி கிடந்தார். அவரது தங்கை ரங்கநாயகி அவரை மீட்டு. தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். தீவிர சிகிச்சை பெற்று வந்த செண்பகம் நேற்று உயிரிழந்தார். மயிலாப்பூர் போலீசார் 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்ததில், 21ம் தேதி மர்ம நபர் ஒருவர், செண்பகம் வீட்டிற்குள் சென்று வந்தது தெரிய வந்தது. அவர் பயன்படுத்திய இருசக்கர வாகன எண்ணை வைத்து, ராயப்பேட்டையைச் சேர்ந்த அசார் ஹுசையின், 29, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர், செண்பகத்தை தாக்கி, 5.5 சவரன் நகையை திருடிச் சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். திருடிய நகைகளை, ஐஸ் ஹவுஸ் பகுதியில் உள்ள அடகுக் கடையில் வைத்ததாக தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி