உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இடியும் நிலையில் ரேஷன் கடை நெற்குன்றம் நுகர்வோர் மரணபீதி

இடியும் நிலையில் ரேஷன் கடை நெற்குன்றம் நுகர்வோர் மரணபீதி

சோழவரம், சோழவரம் அடுத்த நெற்குன்றம் கிராமத்தில், 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டடம் சேதமடைந்து உள்ளது. கட்டடத்தின் துாண்கள் மற்றும் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டு உள்ளன.மேற்கூரையில் இருந்து சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்தபடி உள்ளன. கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.இக்கடைக்கு நெற்குன்றம், நெற்குன்றம்பாளையம், தெலுங்கு காலனி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்களை வாங்க வருகின்றனர்.கட்டடம் பாழடைந்து, சேதமான நிலையில் இருப்பதாலும், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்து உள்ளதால், ஒருவித அச்சத்துடனேயே பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இங்கு, வேலை பார்க்கும் ஊழியர்களும் மரணபீதியில் உள்ளனர்.இதே வளாகத்தில் அரசு பள்ளி, ஊராட்சி அலுவலகம் ஆகியவையும் அமைந்துள்ளன. பள்ளி மாணவர்கள் மற்றும் ஊராட்சி அலுவலகத்திற்கு வருவோரின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி வருகிறது.மேலும், கட்டடத்தில் உள்ள விரிசல்கள் வழியாக மழைக்காலங்களில் மழைநீர் கசிந்து, உணவுப்பொருட்கள் நனைந்து வீணாகின்றன.இந்த கட்டத்தை இடித்துவிட்டு, புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் தொடர்ந்து வலியுறுத்தியும், ஒன்றிய நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக, அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.எனவே, கட்டடம் இடிந்து விழுந்து அசம்பாவிதம் நேரிடும் முன், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை