உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தரமற்ற முறையில் சிமென்ட் சாலை கடம்பத்துார் பகுதிவாசிகள் அவதி

தரமற்ற முறையில் சிமென்ட் சாலை கடம்பத்துார் பகுதிவாசிகள் அவதி

கடம்பத்துார்:கடம்பத்துார் ஊராட்சியிலிருந்து ரயில் நிலையம் வழியே, அதிகத்துார் செல்லும் ஒன்றிய சாலை உள்ளது. இந்த சாலையை மணவாள நகர் செல்ல, பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சேதமடைந்த மோசமான நிலையில் இருந்த இந்த ஒன்றிய சாலை, கடந்த 2020-21ம் ஆண்டு, ஊரக வளர்ச்சித்துறை உள்ளாட்சித்துறையின் சாலை மேம்பாட்டு திட்டத்தில் 62.09 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.இதில், ரயில் நிலையம் அலுவலகம் வரை சிமென்ட் சாலையாகவும் பின், தார் சாலையும் போடப்பட்டது. இதில் சிமென்ட் சாலை ஒரே ஆண்டில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மோசமான நிலைக்கு மாறியது. இதை சீரமைக்க ஒன்றிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால், இவ்வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்வோர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கு ஒன்றிய அதிகாரிகள் சாலையை முறையாக ஆய்வு செய்யாததே காரணம் என, பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே மாவட்ட நிர்வாகம் கடம்பத்துார் ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும், சாலை சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலை பணி கிடப்பில் திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டது சின்னம்மாபேட்டை ஊராட்சி. இங்கு 15,000த்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இங்கு சின்னம்மாபேட்டை --வியாசபுரம் வரையில், 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட தார்ச்சாலை, மூன்று ஆண்டுகளாக சேதமடைந்து இருந்தது. எனவே இந்த தார்ச்சாலையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து நபார்டு மற்றும் கிராம சாலைகள் மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் 2.25 கி.மீ., நீளத்திற்கு 1.50 கோடி ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டு பணி துவங்கியது. தற்போது ஜல்லிக்கற்கள் கொட்டி ஐந்து மாதமாகியும், இதுவரை சாலை அமைக்கப்படவில்லை.இதனால், கொட்டப்பட்ட ஜல்லிக்கற்கள் ஆங்காங்கே சிதறி, இருசக்கர வாகனத்தில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.கிராமத்தின் பிரதான சாலையே இந்த நிலையில் உள்ளதால், பகுதிவாசிகள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட சென்று வர முடியாமல் தவிக்கின்றனர்.இந்நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் கிராமத்தின் முக்கிய சாலையை, விரைந்து அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி