மேலும் செய்திகள்
பவானியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
14 hour(s) ago
இன்று இனிதாக திருவள்ளூர்
14 hour(s) ago
அரசு பஸ்சில் ஸ்டிக்கர் ஒட்டிய நா.த.க.,வினர் கைது
14 hour(s) ago
டேபிள் டென்னிஸ் எஸ்.ஆர்.எம்., பல்கலை சாம்பியன்
14 hour(s) ago
திருவள்ளூர்:திருவள்ளூர் வட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுவானுார் கண்டிகை கிராமத்தில், ஜெ.ஜெ.கார்டன் குடியிருப்பு பகுதி உள்ளது. திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை சாலையில், ஐ.சி.எம்.ஆர்., அருகில் அமைந்துள்ள இந்நகரில், 100க்கும் மேற்பட்டோர் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். மேலும், பல வீடுகள் இங்கு கட்டப்பட்டு வருகிறது.சிறுவானுார் கண்டிகை ஊராட்சிக்கு உட்பட்ட இந்த நகரில், அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, கழிவு நீர் கால்வாய் உள்ளிட்ட வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. இந்த நகரில், இரண்டு இடத்தில் குடிநீர் தொட்டி அமைத்தும், இதுவரை குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. கோடை காலத்தில், குடிநீர் கிடைக்காமல், தண்ணீர் கேன்களை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.சாலை வசதி இல்லாததால், மழை காலத்தில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி, நீச்சல் குளம் போல் காட்சியளிக்கிறது. இரவு நேரத்தில், பாம்பு, தேள், பூரான் போன்ற விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. போதுமான மின்விளக்கு வசதிகள் இல்லாததால், இருளில் மூழ்கியுள்ள இந்த நகரில், பொதுமக்கள் நடமாட அச்சப்படுகின்றனர்.மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன் 30 லட்சம் ரூபாய் செலவில் 'கிராவல் மண்' அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலையும் சேதமடைந்து காணப்படுகிறது.எனவே, ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாக அதிகாரிகள், ஜெ.ஜெ.கார்டனில் போதுமான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறு, மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago