உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மகளிர் உரிமை தொகை குறித்து வாட்ஸ்ஸாப் தகவலால் பரபரப்பு

மகளிர் உரிமை தொகை குறித்து வாட்ஸ்ஸாப் தகவலால் பரபரப்பு

திருவள்ளூர்,:திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூபாய் 1,000 பெறுவதற்கான சிறப்பு முகாம் நேற்று 17ம் தேதி, நாளை 19 மற்றும் 20 தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு பொதுமக்கள் மனு கொடுத்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என வாட்ஸ்ஸாப் குழுவில் நேற்று செய்தி வெளியானது.இந்த செய்தியை பார்த்த நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கைக்குழந்தையுடன் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று மதியம் வந்து முற்றுகையிட்டனர்.அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், பெண்களிடம் இந்த செய்தி பொய்யானது. பொய்யான தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த செய்தியை நம்பி யாரும் உரிமைத் தொகை விண்ணப்பிக்க வரவேண்டாம் என தெரிவித்தார். இதனால் நேற்று மதியம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை