உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அனல் மின்நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அனல் மின்நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மீஞ்சூர்:தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில், நேற்று அத்திப்பட்டு பகுதியில் உள்ள வடசென்னை அனல்மின்நிலைய வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில், வடசென்னை அனல்மின் நிலையங்களின் ஊழியர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின்போது, மின்வாரியத்தில் காலியாக உள்ள 32,000 பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்; மின்வாரியத்தை பல்வேறு கூறுகளாக பிரித்து தனியார் மயமாக்கும் போக்கை கைவிட வேண்டும்; மின்வாரிய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை காலதாமதமின்றி வழங்க வேண்டும்; பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோஷமிட்டனர்.அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால், ஜூலை 9ம் தேதி முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை