உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி தளபதி பள்ளி மாணவர்கள் சாதனை

திருத்தணி தளபதி பள்ளி மாணவர்கள் சாதனை

திருத்தணி:திருத்தணியில் இயங்கி வரும், தளபதி கே.விநாயகம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த மார்ச் மாதம் நடந்த, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், மொத்தம் 110 மாணவ- -மாணவியர் தேர்வு எழுதினர். இதில், அனைவரும் தேர்ச்சி பெற்றனர். பள்ளி அளவில் ஹரிணி என்ற மாணவி, 500க்கு, 492 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். ஜனணி மற்றும் லோகேஷ் ஆகிய இருவரும், 500க்கு, 486 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், கோகுல், 485 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பிடித்தனர்.கணிதப்பாடத்தில், 11 மாணவர்களும், அறிவியல் பாடத்தில் ஒரு மாணவரும், 100க்கு, 100 மதிப்பெண்கள் பெற்றனர். திருத்தணி கல்வி மாவட்ட அளவிலும், பள்ளி அளவிலும் முதலிடம் பிடித்த மாணவி ஹரிணிக்கு பள்ளி தாளாளர் எஸ்.பாலாஜி பரிசு வழங்கி பாராட்டினர். பள்ளி முதல்வர் விநாயகம், துணை முதல்வர் மற்றும் மாணவியின் பெற்றோர் பங்கேற்றனர்.இதே பள்ளி, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்விலும், திருத்தணி கல்வி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ